விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னருக்கு ரூ.34 கோடி பரிசுத் தொகை தரப்பட்டது: ஜானிக் சின்னர் 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் ‘நம்பர்-1’ வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரும், ‘நம்பர்-2’ வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸும் மோதினர்.
இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். ஆனால் அடுத்தடுத்த செட்களில் ஜானிக் சின்னர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். 2வது செட்டை 6-4 என சின்னர் வென்றார். இதையடுத்து 3 மற்றும் 4வது செட்களையும் 6-4 என சின்னர் வென்றார். முடிவில், 3 – 1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2024) அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்தார். மேலும், விம்பிள்டனில் ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவும் தகர்ந்தது. விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னருக்கு ரூ.34 கோடி பரிசுத் தொகை தரப்பட்டது: ஜானிக் சின்னர் 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
The post விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! appeared first on Dinakaran.