விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்; பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்!!

2 hours ago 3

ஜலந்தர்: போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்த அவர், துணிச்சல் மிகு வீரர்களிடம் கலந்துரையாடினார். தீவரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;

விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்: பிரதமர்
பாரத மாதா வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நமது ஏவுகணைகள் எதிரிகளின் தளங்களை அழித்தன: பிரதமர் மோடி
நமது ஏவுகணைகள் எதிரிகளின் தளங்களை அழித்துவிட்டன. விமானப்படை வீரர்களின் தீரச் செயல்கள் இந்தியாவுக்கு பெருமையை தேடித் தந்துள்ளது. விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர் என்றார்.

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: மோடி
ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் எனது வீரவணக்கம். இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டியுள்ளது சிந்தூர் நடவடிக்கை. நமது சகோதரி நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்துவிட்டனர் தீவிரவாதிகள். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்துவிட்ட எதிரிகளை பழிதீர்த்துவிட்டோம் என கூறினார்.

தீவிரவாதிகளை இந்தியா அழித்தொழிக்கும்: பிரதமர் மோடி
அப்பாவி இந்திய மக்களை ரத்தம் சிந்த வைத்தவர்களை நாம் அழித்தொழிப்போம். பாகிஸ்தானில் உள்ள எந்த தீவிரவாதிகள் முகாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை குறிவைக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்துக் கட்டுவோம். தீவிரவாதிகளை அவர்கள் குடியிருக்கும் இடத்திலேயே தாக்கி அழிப்போம் என பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்தார்.

பயணிகள் விமானங்களை பாக். கேடயமாக பயன்படுத்தியது: மோடி
தாக்குதலில் இருந்து தப்பிக்க பயணிகள் விமானத்தை பாக். கேடயமாக பயன்படுத்தியது. இந்திய விமானப்படை, பாக். வான்பரப்பில் பறந்த பயணிகள் விமானங்களை தவிர்த்துவிட்டன. பாகிஸ்தானில் வெகுதூரம் ஊடுருவி இந்திய விமானங்கள் உயர் தொழில்நுட்ப உதவியால் தாக்குதல் நடத்தின. இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பின் முன் பாகிஸ்தானின் ஏவுகணைகள் பயனற்று போய்விட்டன.

இனி ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் பதிலடி: மோடி
புதிய லட்சுமணக் கோட்டை பாகிஸ்தானுக்கு வரைந்துள்ளது இந்தியா. தீவிரவாதத்தை எதிர்த்து புதிய கொள்கையை வகுத்துள்ளது இந்தியா. இனி ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுக்கும். இந்தியாவை பொறுத்தவரை தீவிரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் ஒன்றுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்; பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்!! appeared first on Dinakaran.

Read Entire Article