கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் வந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறை வான் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது, 5.25 கிலோ உயர்ரரக கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணி மீது போதைப்பொருட்கள் சட்டம் மற்றும் சுங்கச்சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விமானத்தில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா கோவையில் பறிமுதல் appeared first on Dinakaran.