விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை

3 months ago 20

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் (06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டு களித்தனர். இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறுகையில்,

*மரணமடைந்த குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

*இனி வரு காலங்களில் பொது நிகழ்ச்சியில் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்து கொள்ள வேண்டும்.

* இந்திய விமானப் படை கடந்த காலங்களில் மாலை நேரத்தில் விமான சாகச நிகழ்வை நடத்தியது. ஆனால், இப்போது 11 முதல் 1 மணி வரையிலான உச்சி வெயிலில் மக்களை திரட்டி வான் சாகசங்களை நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன?

*பறிபோன ஐந்து உயிர்களும் விலைமதிக்க முடியாதவை.

*வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியானதை நியாயப்படுத்த முடியாது.

*விமானப்படைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

*15 லட்சம் பேர் ஒரே இடத்தில் திரண்டாலும் அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை, வெளியில் போகும் போது நீர்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

*விசாரணை ஆணையம் அமைத்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.

*உயிரிழந்தோரின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும்.

*உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Read Entire Article