விமான சாகச நிகழ்ச்சி - சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

1 month ago 13

சென்னை,

விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் வருகிற 6-ந்தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக கவர்னர், தமிழக முதல்-அமைச்சர், விமானப்படை தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் இன்று முதல் 5-ந்தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்வை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி, சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் காந்தி சிலை, போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மற்ற வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரீஸை நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காந்தி மண்டபம் சாலை வழியாக அண்ணா சாலையை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Read Entire Article