"விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்"... ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் பேச்சு

3 months ago 12
எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு எந்த வகையில் துணையாக இருக்க முடியுமோ இருப்பேன் எனவும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 பிரீமியர் காட்சியை காண வந்து கூட்டத்தில் சிக்கி ரேவதி உயிரிழந்த வழக்கில் கைதான அல்லு அர்ஜுன் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளரை சந்தித்தார். கடந்த 20 வருடங்களாக தன்னுடைய திரைப்படம் ரிலீசாகும்போது திரையரங்கிற்கு சென்றுள்ளதாகவும், இம்முறை இதுபோன்ற துரதிருஷ்டமான சம்பவம் நடந்தது வருத்தமானது எனவும் தெரிவித்தார்.
Read Entire Article