விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

12 hours ago 3

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஜூலை 2-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் காவல் துறையினருக்கு சுய ஒழுக்கம் அவசியம் என்ற தலைப்பில் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த ஆலோசனையிலேயே அடுத்த மாதம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் போது புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் எதுவும் வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளதாக தகவல் தெரிகிறது.

Read Entire Article