கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வளம் கடத்தல் தொடர்பாக நடந்த ஆய்வில், விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் கனிம வளம் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: