விடுதியின் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த மருத்துவ மாணவி பலி

4 months ago 14

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சலக்கா பகுதி தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த பாத்திமா எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பாத்திமாவை மீட்ட மாணவ,மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Read Entire Article