சென்னை: தமிழகத்தில் சுமார் 32 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 கோடி எண்ணிக்கையில் மாணவ மாணவியர் படித்து வரும் நிலையில் பொருளாதார வசதி குறைந்த மாணவ மாணவியர் தங்கி படிப்பதற்கு ஏற்ப 1351 அரசு மாணவ மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பிற்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறையின் சார்பில் இயங்கி வருகின்றன.
இவற்றில் தற்போது 497 விடுதிகளில் காப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் நியமிக்க மேற்கண்ட துறைகள் முடிவு செய்துள்ளன. டிடிஎட், மற்றும் பிஎட் படித்திருக்க வேண்டும் என்று தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த பணிக்கு பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விடுதிக் காப்பாளர் பதவிக்கு ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்: பிற்பட்டோர் நலத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.