விருதுநகர், நவ.18: விருதுநகர் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில் குமார் தலைமையில் ஆவின் மருத்துவகுழு மூலம் வத்ராப் பகுதி மேலப்பாளையம் கிராமத்திலும், சிவகாசி வட்டம் ரங்கபாளையம் கிராமத்திலும் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வெம்பக்கோட்டை வட்டத்தில் ஆலங்குளம் சங்கம், சிவகாசி வட்டத்தில் ஈஞ்சார் சங்கம், நரிக்குடி வட்டத்தில் இலுப்பையூர் சங்கம், காரியாபட்டி வட்டத்தில் ஆவியூர் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் ராமச்சந்திரபுரம் சங்கம், ராஜபாளையம் வட்டத்தில் முகவூர் சங்கம், சாத்தூர் வட்டத்தில் சொக்கலிங்கபுரம் சங்கம், வத்ராப் வட்டத்தில் கூமாபட்டி சங்கம், விருதுநகர் வட்டத்தில் டி புதூர் சங்கம் மற்றும் திருச்சுழி, அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
The post இலவச கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.