'விடுதலை 2' வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய வெற்றிமாறன்

3 weeks ago 7

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 'விடுதலை 2' திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட 'விடுதலை 2' படக்குழுவினர் இணைந்து கொண்டாடினர். இச்சந்திப்பின்போது, வெற்றி மாறனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை ரசிகர்களும் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். 

Celebrating the roaring success of #ViduthalaiPart2 , A cinematic masterpiece that has won hearts...Film by #VetriMaaran An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72 #Kishorepic.twitter.com/EAu1MYmjXq

— RS Infotainment (@rsinfotainment) December 29, 2024

pic.twitter.com/L94qjpuShG

— Vetri Maaran (@Dir_Vetrimaaran) December 30, 2024
Read Entire Article