'விடாமுயற்சி' படத்தின் 'சவதீகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

3 weeks ago 3

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், முதல் பாடல் வெளியாகி உள்ளது.அதன்படி, 'சவதீகா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர்.

தற்போது இப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vibe check: %! The #Sawadeeka ❤️ Lyric Video is OUT NOW ▶️ Turn up the volume and let the trippy beats take over! https://t.co/idNfmq6pUyAn @anirudhofficial musical Sung by @anthonydaasan ️Written by @Arivubeing ✍Choreography by @kayoas13 #Vidaamuyarchipic.twitter.com/v0qAUl2vc8

— Lyca Productions (@LycaProductions) December 27, 2024
Read Entire Article