விஜய்க்கு மக்களின் ஆதரவு; 2026 தேர்தலில் தெரியும்: சசிகலா பேட்டி

6 months ago 19

தூத்துக்குடி: நடிகர் விஜய்க்கு மக்களின் ஆதரவு 2026 சட்டமன்ற தேர்தலில்தான் தெரியும் என்று சசிகலா கூறினார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வாகைக்குளத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சூழ்நிலை எப்போதும் போலதான் உள்ளது. புதிய கட்சிகள் (நடிகர் விஜய்) தொடங்கியவர்கள் பற்றி 2026 தேர்தலில்தான் தெரியும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் வரப்ேபாகிறது. ஆகவே, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பயணத்தை தொடங்கி இருப்பார்கள்.

தேர்தல் வேலைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர். இது 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு காரில் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டார்.

The post விஜய்க்கு மக்களின் ஆதரவு; 2026 தேர்தலில் தெரியும்: சசிகலா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article