விஜய் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி திடீர் மரணம்

4 months ago 17

புதுச்சேரி: விஜய்யின் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) திடீரென இன்று உயிரிழந்தார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலர் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி தேவி மற்றும் மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அதன் புதுவை மாநிலச் செயலாளராகவும், அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்தார். வரும் 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார்.

Read Entire Article