விஜய் உங்களுக்கு போன் பண்ணி பேசினாரா? - செய்தியாளர் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்

1 month ago 9

கோவை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எப்போதும் யாருக்கும் நாங்கள் துரோகம் இழைக்கவில்லை. தி.மு.க.தான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது என்றார்.

அ.தி.மு.க.வின் ஆட்சியில் சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு நாங்கள் வழங்கினோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில், மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது என்றார்.

தி.மு.க. 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு பழி சொல்வது தி.மு.க.வின் வாடிக்கை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் த.வெ.க. தலைவர் விஜய், உங்களுக்கு போன் (தொலைபேசி வழியே) பண்ணி பேசினாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி அப்படி எதுவும் இல்லை என கூறினார்.

Read Entire Article