
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனை தொடர்ந்து இவர் தற்போது தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் நடிகை திருப்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான 'அருவி, வாழ்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விஜய் ஆண்டனியின் 22வது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.