விஜயநாராயணம் அருகே பண்ணையில் 12 பன்றிகள் திருட்டு

2 weeks ago 1

நெல்லை, ஜன.23: விஜயநாராயணம் அருகே பண்ணையில் இருந்த 12 பன்றிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயநாராயணம் அருகே பரப்பாடி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் கணேசன் (48). இவர் அதே பகுதியில் சீயோன்மலை கிராமம் அருகே பன்றி பண்ணை வைத்து உள்ளார். அதில் 40 பன்றிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ணையை அடைக்கும் போது 40 பன்றிகளுக்கு இரை வைத்துச்சென்றார். அதன்பின்னர் நேற்று காலை மீண்டும் பண்ணைக்கு சென்ற அவர் அங்குள்ள பன்றிகளை ஒவ்வொன்றாக எண்ணினார். அப்போது 12 பன்றிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயநாரயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post விஜயநாராயணம் அருகே பண்ணையில் 12 பன்றிகள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article