விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார் - விஜய பிரபாகரன்

2 months ago 14

மதுரை,

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க குரு பூஜையில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை உடன் வந்துள்ளேன். அதன் பின் இப்போது வந்துள்ளேன்.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அண்ணன் விஜய் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அதற்கு வாழ்த்துகள். விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார். விஜயகாந்த் தலைமையில் நடந்த மாநாட்டை தினமும் நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநாடு நடக்கும்போது நினைவுகளை சுட்டிக் காட்டுவது வழக்கம். அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும் போது அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை நாங்களும் முன்வைக்கிறோம் என்றார்.

"விஜயகாந்த் மாநாடு தான் பெரிய மாநாடு" விஜய்யுடன் கூட்டணி..? விஜய பிரபாகரன் பரபரப்பு பேட்டி#thanthitv #vijayakanth #vijay #tvk pic.twitter.com/9jLWpPSVn9

— Thanthi TV (@ThanthiTV) October 30, 2024

Read Entire Article