விஜய தசமியையொட்டி உத்தமர்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: குழந்தைகளுடன் குவிந்தனர்

3 months ago 15

சமயபுரம்: சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி படிப்பை தொடங்கும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ராமர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஞான சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஞான சரஸ்வதியின் முன்பு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அமர்ந்து நெல் பரப்பில் தமிழ் முதல் எழுத்தை (அ) எழுதி எழுத்து பயிற்சி கற்றுக் கொடுத்தனர். இதனையடுத்து மூலவர் ஞான சரஸ்வதியின் பாதத்தில் புத்தகம், நோட்டு, எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

The post விஜய தசமியையொட்டி உத்தமர்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: குழந்தைகளுடன் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article