
சென்னை,
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், கல்விக்கு உகந்த நாளாக விஜய தசமி கருதப்படுகிறது. அதனால் இந்த பண்டிகையை முன்னிட்டு தனியார் பள்ளிகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே பள்ளிகளுக்கு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக வருகை புரிந்தனர்.
மேலும் இந்த பண்டிகையை முன்னிட்டு அரசு தொடக்க பள்ளிகளை திறந்து வைக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், அன்றைய தினம் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.