விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட்: திருமாவளவன் நடவடிக்கை

4 months ago 15

சென்னை: விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அண்மையில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் திருமாவளவன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Read Entire Article