சிதம்பரம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டம் வரும் 6ம் தேதி சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடைபெற உள்ளது. நேற்று வி.சி. கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார், மேடை அமைக்கும் பணிகளை திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகளுடன் பார்வையிட மேடை மீது ஏறினர்.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக படிக்கட்டில் ஏறி ரவிக்குமார் எம்பி, உள்ளூர் நிர்வாகிகள் மேடைக்கு சென்றனர். அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் சென்றனர். அப்போது மேடையின் மேல் நெருங்குவதற்கு முன், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மேடைக்கு செல்லும் படிக்கட்டு சரிந்து விழுந்தது. இதில் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்தனர். இதில் 2 எம்எல்ஏகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
The post விசிக மேடை சரிந்து 2 எம்எல்ஏக்கள் காயம் appeared first on Dinakaran.