விசிக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை

6 months ago 19

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சின்ன வளவனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மகேஷ். ஆட்டோ டிரைவரான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலம் மத்திய ஒன்றிய துணை செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் மகேசும், அவரது மனைவி சுகுணாவும் கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேணிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article