விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..

6 months ago 23
கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் பகுதியில் விசாரணைக்கு அழைத்தும் வராதவரை பூட்ஸ் காலால் உதைத்த காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டுமான மேஸ்திரி வேல்முருகனின் மகன் கார்த்திக் கடன் வாங்கி விட்டு ஏமாற்றியதாக சிறுமுகை காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில் விசாரிக்க வேல்முருகனை அழைத்த போது அவர் வர மறுத்ததால் காவலர் ரஞ்சித் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சரண்ராஜ் ஆகியோர் சேர்ந்து சாலையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
Read Entire Article