சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வி.ஆர்.வணிக வளாகத்தில் வாகன நிறுத்த கட்டணமாக முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 வசூலிக்கின்றனர். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா ரூ.30 வசூலிப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
The post வி.ஆர்.வணிக வளாகத்தில் வாகன நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.