வாவல் மீன் மூலிகை வறுவல்

1 day ago 5

தேவையான பொருட்கள்:

வாவல் மீன் – 1 பெரியது
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செலரி – 1 கொத்து
தைம் – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
வாழை இலை – ஒரு பகுதி.

செய்முறை :

மீனை சுத்தம் செய்து இரண்டு புறமும் கீறல் போடவும். மிளகுத்தூள், சீரகத்தூள், வெண்ணெய், ஆலிவ் ஆயில், நசுக்கிய பூண்டு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு நறுக்கிய செலரி மற்றும் தைமை மீனின் மேலே தூவி வாழை இலையில் மடித்து தோசை கல்லை சூடேற்றி வெண்ணெய் தடவி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். சுவையான வாவல் மீன் மூலிகை வறுவல் தயார்.

The post வாவல் மீன் மூலிகை வறுவல் appeared first on Dinakaran.

Read Entire Article