
சென்னை,
தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான், தேவ், என்ஜிகே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் 'தே தே பியார் தே 2' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் "இந்தியன் 3" படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரகுல்பிரீத் சிங் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு குடும்பத்தோட பொழுதுபோக்கியதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதனுடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில்,
'வாழ்க்கையில் நமக்கு முக்கியமானவர்கள் நம்மை சுற்றி இருக்கும்போது ஜாலியா இருப்பது வேறலெவல் உணர்வு' என்று கூறி இருக்கிறார்.