தேவையான பொருட்கள்
1 கப் கடலை மாவு
¼ கப் உளுத்தம் மாவு
1 கப் அரிசி மாவு
2 மேஜைகரண்டி கார்ன் ஸ்டார்ச்
¼கப் வாழைப்பூ, சின்ன சின்னதாக நறுக்கியது
2 கப் வாழைக்காய் துருவல் (½வாழைக்காய்)
½ கப் வாழை இலை, பொடியாக நறுக்கியது
¼ கப் கொத்தமல்லி
சிட்டிகை பெருங்காயம்
1/2 தேக்கரண்டி மிளகு பொடி
1 தேக்கரண்டி சீரகப் பொடி
1 தேக்கரண்டி தநியா பொடி
1 தேக்கரண்டி மிளகாய் பொடி
¼தேக்கரண்டி மஞ்சள் பொடி
1 தேக்கரண்டி பேகிங் சோடா
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு சன் ஃபிளவர் எண்ணை
செய்முறை
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க,வாழைக்காய் தோலுரித்து, துருவிக்கொள்ளுங்கள் துருவலை ஒரு கிண்ணத்தில் போட்டு ½ எலுமிச்சை சாரு சேர்க்க.வாழைப்பூ நடுவில் இருக்கும் காம்பை நீக்குக. 1 கப் மோரில் 15 நிமிடம் ஊறவைத்து வடிக்க. பொடி பொடியாக நறுக்குக. இலையை பொடி பொடியாக நறுக்குக.எல்லாவற்றையும் கிண்ணத்தில் சேர்க்க. ஸ்பைஸ் பொடிகள், மாவுகள், சோடா. உப்பு, கொத்தாமல்லி சேர்க்க. சிறிது தண்ணீரை சேர்த்து கையால் பிசைக.. மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.மிதத்திர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மீது ஒரு கடாயில் பொறிக்க தேவையான எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.வடை மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பண்ணிக்கொண்டு, உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டி கொள்ளுங்கள். சூடான எண்ணையில் இரண்டு பக்கமும் சிவக்குமாறு பொறிக்க. ஒரு வடையை பிய்த்துப் பார்த்தால் வெந்து விட்டதா இல்லயா என்று தெரியும. வடைகளை ஒரு தட்டின் மேல் பேப்பர் டவல் போட்டு அதன் மேல் பொறித்த வடைகளை போடுங்கள். பேப்பர் டவல் ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணையை நீக்கும். சுவையான சத்தான வித்தியாசமான மொரு மொரு வடைகளை ருசித்துப் பார்த்து வாழை இலை மேல் வைத்து பரிமாறுக, சட்னி அல்லது கேட்சப் கூட பரிமாறுக
The post வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை appeared first on Dinakaran.