தேவையான பொருட்கள்
6 மேஜைகரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்
10 கிராம்பு
4துண்டு 1அங்குலம் இலவங்கப்பட்டை
1பிரின்சி இலை
6 ஏலக்காய்
½ தேக்கரண்டி கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா)
1 கப் வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது
1 மேஜைகரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
2பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது
1 கப் தக்காளி பொடியாக நறுக்கியது
½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
1 தேக்கரண்டி காஷ்மீரி சில்லி மிளகாய் பொடி
1 மேஜைகரண்டி சீரகப் பொடி
1 மேஜைகரண்டி தனியா பொடி
1 பெரிய வாழைப்பூ
2 கப் தயிர்
1 தேக்கரண்டி பிரியாணி மசாலா
1 கப் தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி
2 மேஜைகரண்டி நெய்
தேவையானஉப்பு
1 கப் கொத்தமல்லி,பொடியாக நறுக்கியது
1 கப் புதினா, பொடியாக நறுக்கியது
1 தேக்கரண்டி குங்குமப்பூ
அலங்கரிக்க:
1 கப் வறுத்த வெங்காயம்
½ கப் வறுத்த முந்திரி
செய்முறை
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான 4 மேஜைகரண்டி ஆலிவ் ஆயிலில் மெல்லி
யதாக சீவிய வெங்காயம், முந்திரி வறுக்க.குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் கொதிக்கும் நீரில் கரைக்க. மீடியம் ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் கொதிக்கும் 5 கப் நீரில் ¼கப் புதினா, ¼கப் கொத்தமல்லி, அரிசி சேர்த்து 1 மேஜை கரண்டி நெய்யுடன் 5 நிமிடங்கள் வேகவைக்க. அரிசி 70% வெந்தால் போதும். உப்பு சேர்க்க. வெளியே எடுத்து வடிக்க.
வாழைப்பூ தயாரிக்க பொறுமை வேண்டும். பர்ப்பள் நிறம் கொண்ட இலைபோல் இருக்கும் bracts (இது botanical term தமிழ் சொல் தெரியாது) கொத்து பூக்களை மூடி கொண்டிருக்கும். (படம்) வாழைப்பூ நடுவில் இருக்கும் காம்பை நீக்குக. பொடியாக நறுக்குக. நறுக்கிய துண்டுகளை மோரில் ஊறவைக்க. துவர்ப்பு போகும் பின் குக்கரில் வேகவைக்க. வெந்த பின், வடிக்க.கரண்டி ஆலிவ் ஆயிலில் சூடான பின் கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரின்சி இலை ஏலக்காய், கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா) ஓவ்வொன்றாக சேர்த்து வதக்க-2 நிமிடங்கள்.. வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க.
பச்சை மிளகாய் சேர்க்க. தக்காளி சேர்த்து நன்றாக 4-5 நிமிடங்கள் வதக்க. மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி, தேவையானஉப்பு சேர்த்து வதக்க. கப் நீர் சேர்த்து கிளறி கொதிக்க வைக்க. வேகவைத்த வாழைப்பூ சேர்த்து வதக்க.தயிர், கரம் மசாலா பொடி சேர்க்க. 4 நிமிடம் வேகட்டும். பாத்திரத்தை மூடி நெருப்பை சிம்மர் செய்க.வடித்த அரிசியை இந்த பாத்திரத்தில் சேர்க்க. மேலே ¼ கப் புதினா. ¼கப் மல்லி பரவலாக சேர்க்க. வறுத்த பாதி கார்மலைஸ்ட் வெங்காயம், வறுத்த முந்திரி பரவலாக மேலே போடுக. கரைந்த குங்குமப்பூ சேர்க்க. குறைந்த நெருப்பின் மேல் 20 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க.வெளியே எடுத்து, திறந்து மீதிநெய் சேர்த்து கிளற. உதிரி உதிரியான வாசனைதூக்கும் பிரியாணி தயார்.
The post வாழைப்பூ பிரியாணி appeared first on Dinakaran.