வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

1 month ago 4

பெங்களூரு: கர்நாடக மாநில வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் நடந்துள்ள நிதி முறைகேடு புகாரில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திராவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநில வால்மீகி பழங்குடியின மேம்பாட்டு வாரிய மேற்பார்வையாளர் சந்திரசேகரன் கடந்த மே 27ம் தேதி ஷிவமொக்கா மாநகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த டெத் நோட்டில் மாநில பழங்குடியின அமைச்சராக இருந்த பி.நாகேந்திராவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது.

அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு புகாரை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தனர். வாரியத்தில் ரூ.187 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்ததுடன், முறைகேடுக்கு பொறுப்பேற்று பி.நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக பாஜ கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து முதல்வர் சித்தராமையாவின் அறிவுறுத்தல் பேரில் கடந்த ஜூன் 6ம் தேதி அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்தார்.

இதனிடையில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் நடந்துள்ள முறைகேடு புகார் காரணமாக கடந்த ஜூலை 10ம் தேதி ஒன்றிய அமலாக்க துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சரும் பல்லாரி ஊரக தொகுதி பேரவை உறுப்பினருமான பி.நாகேந்திரா, கர்நாடக வால்மீகி வளர்ச்சி வாரிய தலைவரும் ரெய்ச்சூர் தொகுதி பேரவை உறுப்பினருமான பசனகவுடா தத்தால் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். 48 மணி நேரம் இருவரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் சில முக்கிய மத்திய பகுதிகளில் நிலை கொள்ளும்.

அதற்கு பிறகு மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். அதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்யும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து 4 நாட்களில் விலகும் நிலையில் கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும். அதனால் வட கிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் (15 அல்லது 16ம் தேதி) தொடங்கும்.

அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். அதற்கடுத்த 2 நாட்களுக்கும் மழை நீடிக்கும். 17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று (13ம்தேதி) 50 மிமீ மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த கனமழை எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவ மழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம். அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம்.

25 செமீ அளவுக்கு மழை பெய்யும் என்று கூறுவது சரியானது அல்ல. குறிப்பிட்ட இடத்தில் 20 முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று கணித்து சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மழை பெய்த பிறகு தான் தெரியவரும். அதனால் கனமழை பெய்யும் என்றால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு பிறகு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதன்படி 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும். 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் வட தமிழக கடலோரப் ப குதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article