வாலிபர் பலி

2 weeks ago 6

 

தேனி, ஜன. 14: தேனி அருகே கெப்புரெங்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(19). இவரும், இவரது அத்தை மகனான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வெறியப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சுரேந்தர்(16) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் டூவீலரில் தேனியில் பங்களாமேடு அருகே தேனி நேரு சிலைநோக்கி வந்து கொண்டிருந்தனர். டூவீலரை சந்தோஷ்குமார் ஓட்டி வந்தார். அப்போது பங்களாமேடு அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென எவ்வித சைகையும் காட்டாமல் திடீரென வலதுபுறம் திரும்பி லாரியை நிறுத்தினார். இதனால் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சந்தோஷ்குமாரின் டூவீலர் லாரியின் பின்புறம் மோதியது.இதில் சந்தோஷ்குமார் மற்றும் சுரேந்தருக்கு காயம் ஏற்பட்டு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இவ்விபத்துகுறித்து சுரேந்தர் தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன்(44) மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article