வாலாஜா அருகே இன்று சிவாலய கருவறையில் பிரகாசித்த சூரியகதிர்கள்

1 month ago 10

வாலாஜா: வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் பழமையான உமாமகேஸ்வரி சமேத சுயம்பு நாதஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்ராயாணம், தட்சாயாணம் காலங்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை, சூரியன் ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு இடம் பெயரும்போது சூரிய கதிர்கள் மூலவர் மீது விழுவது வழக்கம். அதன்படி உத்ராயண காலமான தற்போது சூரியன் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்.

இதனால் இன்று காலை சூரிய உதயத்தின்போது கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் விழுந்தது. காலை 6.50 மணியிலிருந்து 7.05 வரை நீடித்தது. இதனால் மூலவர் செந்நிறத்தில் ஜொலித்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிகழ்வின்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

The post வாலாஜா அருகே இன்று சிவாலய கருவறையில் பிரகாசித்த சூரியகதிர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article