திண்டுக்கல்/பழநி, டிச.12: பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் தேசிய மனித உரிமைகள் தினத்தையொட்டி வார்டு சபா கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, துணைத் தலைவர் சகுந்தலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு வாரியாக தனித்தனியாக பல்வேறு இடங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்தில் குடிநீர் பிரச்னை, வரி நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் திமுக பேரூர் செயலாளர் அபுதாஹிர், பேரூராட்சி அலுவலர்கள் முகமது யாசிர், பழனிவேல், குமார மணிகண்டன், முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேவுகம்பட்டி: சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வனிதா தங்கராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வராணி விஜயன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரமேஷ்பாபு கூட்டத்தின் நோக்கம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார். இதில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
The post வார்டு சபை கூட்டம் appeared first on Dinakaran.