வார ராசிபலன் 27.10.2024 முதல் 02.11.2024 வரை

2 months ago 15

இந்த வார ராசிபலன்

மேஷம்

மனதில் உள்ள குழப்பங்கள் அகன்று தெளிவு ஏற்படும் காலகட்டம் இது. குடும்ப நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில் துறையினர் துணிச்சலான முடிவுகளை எடுக்கவேண்டும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை கையாண்டு வர்த்தகத்தை பெருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்து ஆதாயம் அடையலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வாகனங்கள் மற்றும் அழகு சாதன நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். கலைத்துறையினர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மீடியாவில் பணியாற்றுபவர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

நண்பர்கள், உறவினர்கள் வருகையால் மனம் உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். தொழில் துறையினர் நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து விடுபடுவர். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டும் கவனிப்பது அவசியம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை இவ்வாரம் தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். கலைத்துறையினர் எதிர்பாராத வாய்ப்புகளை பெற்று மகிழ்வர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவர். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவு பிரயாணங்களைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

மனதில்பலவித குழப்பங்கள் ஏற்பட்டுநீங்கும் காலகட்டம் இது. சுபகாரியங்களில் கலந்து கொள்ள குடும்பத்தினரோடு பல இடங்களுக்கு பிரயாணம் செல்லும் சூழல் ஏற்படும். தொழில் துறையினர் சில விஷயங்களில் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். வியாபாரிகள் பழைய கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அழகு சாதன பொருட்கள், கார் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். கலைத்துறையினர் நிதானமாக செயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டும். மீடியாவில் பணியாற்றுபவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கடகம்

மனதில் உற்சாகமும், தெளிவும் ஏற்படும் காலகட்டம் இது. குடும்ப நிலையை பொறுத்தவரை அமைதியாக இருக்கும். தொழில் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ற ஆதாயம் அடைவர். வியாபாரிகள் அரசுத்தரப்பு ஆதாயங்களை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் சிரமமான காரியங்களை முடித்து நிர்வாகத்தின் பாராட்டை பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த அரசு அங்கீகாரம் கிடைக்கப்பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பெயர் பெறுவார்கள். மீடியாவில் பணியாற்றுபவர்கள் புதிய நபர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போதுகவனமாக இருக்க வேண்டும். சுவாசக்கோளாறு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சையால் குணம் ஏற்படும்.

சிம்மம்

அமைதியான வாரம் இது. குடும்ப நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். தொழில் துறையினர்நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஆர்டர்கள் கிடைக்கப்பெறும். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்குவதற்கான சூழல் அமைந்துள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் விளம்பரம் செய்யும் அளவுக்கு வர்த்தகம் பெருகும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொறியியல் மற்றும்நிலக்கரி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவர். மீடியாவில் பணிபுரிபவர்கள் குழுவாக பணியாற்றி பாராட்டு பெறுவார்கள். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இரவுப் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

கன்னி

மனதில் அமைதி ஏற்படும் சுமுகமான காலகட்டம் இது. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். தொழில் துறையினர் கடந்தகால திட்டங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும். வியாபாரிகள் பணியாளர்களின் சிறியகுற்றம் குறைகளை பெரிதுபடுத்தாமல் தட்டிக் கொடுத்துச் செல்ல வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சிரமமான பணிகளை கவனமாக நிறைவேற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்தஆதாயத்தை பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன பங்குகளில் லாபம் பெறலாம். கலைத்துறையினர் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் எதிர்பாராத தடைகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். சுவாசக்கோளாறு, இதயம் சம்பந்தமான சிக்கல் இருப்பவர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

துலாம்

நிதானத்தை கடைபிடித்து காரிய வெற்றி அடையவேண்டிய காலகட்டம் இது. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிலகும். தொழில் துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக பணியாற்ற வேண்டும். வியாபாரிகள் வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள்உடல் நலனை கவனத்தில்கொண்டு பணிகளில் ஈடுபட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் கடந்த கால திட்டப்பணிகளை கவனமாக நேரில் சென்று கவனிக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் பல்வேறு தடை தாமதங்களுக்கு இடையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீடியா துறையினர் எதிர்ப்புகளை சந்தித்து மனக்குழப்பம் அடைவர். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

மனதில் இருந்த பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் காலகட்டம் இது. குடும்ப பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். தொழில் துறையினர் இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் கடன் கொடுப்பது, வாங்குவது ஆகிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து நிர்வாகத்தில் பாராட்டு பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலாளர்கள் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் எந்திர தளவாடம், அழகு சாதன நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர். கலைத்துறையினர் பணியிட கருத்துவேறுபாடுகளை பொருட்படுத்தாமல் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் வழக்கத்தை விட பொறுமையாக செயல்பட வேண்டும்.வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.

தனுசு

மனக் கவலைகள் அகன்று உற்சாகம் ஏற்படும் வாரம் இது. குடும்ப உறுப்பினர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக செயல்பட வேண்டும் தொழில் துறையினர்தொழில் விருத்திக்கான நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை மேற்கொண்டு வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.உத்தியோகஸ்தர்கள் நிர்வாக ரீதியான ஆதரவு பெற்று உற்சாகமாக செயல்படுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை இவ்வாரம் தள்ளி வைக்கவும். ஷேர் மார்க்கெட் துறையினர் அழகு சாதனப் பொருட்கள், மோட்டார் வாகன நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறுவர். கலைத்துறையினர் துணிச்சலாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்பட்டு அகலும்.

மகரம்

மனத் தயக்கத்தை அகற்றி துணிச்சலாக செயல்படவேண்டிய காலகட்டம் இது. குடும்ப பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில் துறையினர் புதிய முயற்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் ஆதாயம் அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் சொகுசு வாகன நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் திறமையாக செயல்பட்டு மரியாதையை பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயங்களை செய்து சாதனை புரிவர். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இரவு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

சிறிய விஷயங்களுக்கு கூட பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டிய தருணம் இது. குடும்ப நிலையை பொறுத்தவரை பொருளாதார நிலையை எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில் துறையினர் துணிச்சலாகசெயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டும். வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல்பணியாற்றி மனச்சோர்வுஅடைவர். உத்தியோகஸ்தர்கள்தங்கள் பணிகளை திறம்படசெய்து பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர்எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி, எரிவாயு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். கலைத்துறையினர் பல தடைகளை கடந்து சாதனை புரிவர். மீடியாவில் இருப்பவர்கள் சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்து பணியாற்ற வேண்டும். இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவை வந்து சிகிச்சை மூலம் அகலும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடந்தேறும். தொழில் துறையினர் தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறலாம். வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கத்திற்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று வருவர். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தோடு அனுசரித்து செல்ல வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னர் தொடங்கி நடந்து கொண்டுள்ள திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் தகவல் தொழில்நுட்பம், ஆடை அணிகலன், சொகுசு வாகனம் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடைவர். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பிரபலம் அடைவர். மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய பிராஜெக்ட்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு உடல் நலம் மேம்படும்.

 

Read Entire Article