வார ராசிபலன் 19.01.2025 முதல் 25.01.2025 வரை

3 hours ago 2

இந்த வார ராசிபலன்

மேஷம்

அன்பு கொண்ட நெஞ்சமும், தாராள மனமும் உடைய மேஷ ராசியினர் இந்த வாரம் விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். குடும்ப செலவு அதிகரித்தாலும் தக்க பொருள் வரவும் உண்டு. குடும்பத்தில் விழாக்கால மகிழ்ச்சி நிலவும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் இந்த வாரம் தொழில் வெற்றிக்கான பல விஷயங்களை அறிந்து செயல்படுத்துவார்கள். அதிகார பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் நன்மை பெறும் நேரம் நெருங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். மாணவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் விலகும். வயதான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முடிந்தவரை ஆடை தானம், அன்னதானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

ரிஷபம்

லட்சியத்தில் பிடிவாதமும், இயற்கையை நேசிக்கும் தன்மையும் கொண்ட ரிஷபம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்த தொடங்குவீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயர்ந்து இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்களை வாங்குவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் இவ்வாரம் முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டிட பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறுப்புணர்வுடன் கல்வி கற்க தேவையான ஆலோசனைகளை பெறுவர். இருமல், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அகலும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கோவில் வாசலில் அமர்ந்துள்ள வறியவர்களுக்கு பொருளுதவி அல்லது அன்னதானம் அளிப்பது பல நன்மைகளை தரும்.

மிதுனம்

புத்திசாலித்தனமும், மற்றவர்கள் விஷயத்தில் மிகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்ளும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் குடும்பம் மற்றும் சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு சரியாக வந்து சேரும். இல்லத்துணையுடன் வாக்குவாதம் கூடாது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், தொடர்புகள் கிடைத்து மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் நீர்நிலை பகுதிகளில் புதிய திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கான கருத்துப்பட்டறை, பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள். காலம் தவறி வெளியிடங்களில் உணவு உண்பதால் வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். அன்னை வழி மாமா, மற்றும் தந்தை வழி அத்தை ஆகியோரது ஆசிகளை பெற்று அவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கடகம்

உள்ளத்தில் மென்மையும் அதேசமயம் வலிமையும் கொண்டு, நேர்மையாகவே எப்போதும் நடக்கும் தன்மை பெற்ற கடகம் ராசியினர் இந்த வாரம் மகிழ்ச்சியும், நன்மையும் தரக்கூடிய புதிய தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவுகளை சமாளிக்க திட்டமிட வேண்டும். சொந்தபந்தங்கள் விவகாரங்களில் சற்று விலகி இருக்கவும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெற இரவு-பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் பெருநகரங்களில் கட்டுமான திட்டங்களை தொடங்குவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலைச்சலால் மன உளைச்சல், தலைவலி, முதுகுவலி ஏற்பட்டு தக்க மருத்துவத்தால் குணமாகும். மனைவி வழி சொந்தங்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்வது, மனைவி வழி உறவினர்களாக உள்ள முதியவர்களிடம் ஆசிகள் பெறுவதும் நன்மைகளை ஏற்படுத்தும்.

சிம்மம்

உள்ளத்தில் தைரியம் இருக்கும் அதே அளவு கூச்சமும், மற்றவர் கருத்துக்கு முக்கியத்துவம் தரும் தன்மையும் கொண்ட சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் கடன் வாங்காமல் சமாளிப்பதுடன், சேமிக்கவும் திட்டமிடுவீர்கள். தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டங்களை நேரம் பார்த்து நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினர் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல் தொழில் நிறுவன பங்குகளில் லாபம். அடைவார்கள். ரியல் எஸ்டேட் பிரிவினர் கடன்களை தீர்க்கும் காலம் கைகூடிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி, பொறியியல் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். தலைசுற்றல், மயக்கம் வருவதுபோல இருந்தால் தக்க மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இயன்றவரை தினமும் ஓர் இருவருக்கு அன்னதானம் செய்வது அல்லது பொருள் தானம் தருவது நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி

வேடிக்கையான சுபாவம் கொண்டவர்களாகவும், துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவராகவும் உள்ள கன்னி ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட லாபத்தை அடைவர். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர். வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும் முதியோர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பைரவரின் அம்சமான நாய்களுக்கு பிஸ்கட் வழங்குவதும், பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம்

தங்கள் நலனை போன்று மற்றவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு ஆளுமையோடு செயல்படும் துலாம் ராசியினருக்கு இந்த வாரம் புது நண்பர்கள் கிடைத்து மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலையில் வரவு இருப்பதால் மனதில் நிம்மதி ஏற்படும். இல்லத்துணை, அவர் சொந்தங்களை அனுசரித்து செல்லவும். தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு பெற்று உற்சாகம் அடைவர். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு பிரகாசமான வாய்ப்புகள் வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா பயணம் சென்று மகிழ்வர். பல இடங்களில் தண்ணீர் அருந்துவதால் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பொருளாதார வசதி குறைந்த தங்களுடைய உறவினர்களுக்கு இயன்ற அளவு பண உதவி செய்தால் மனதில் நிம்மதியும், வாழ்வில் நன்மையும் ஏற்படும்.

விருச்சிகம்

நண்பர்கள் மீது உண்மையான அன்பும், பழகுவதற்கு இனிமையான தன்மையும் கொண்ட விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டு. தொழில் துறையினர், வியாபாரிகள் செலவுகளை சந்தித்து சுமுகமாக சரி செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் முதலீடுகளை செய்யும் காலம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக இருந்தாலும் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். நேரம் தவறி உண்பதால் வயிற்று கோளாறு மற்றும் முதுகுவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் விலகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அல்லது சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் அல்லது இனிப்பு வகைகளை பரிசாக வழங்கினால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

இனிமையாக பேசும் தன்மையும், தனிமையை நாடி சிந்தித்துக் கொண்டிருக்கும் இயல்பும் கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் எதிர்பார்த்த தன வரவை பெறுவர். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குடும்ப நிலையில் எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் மனதிடம் ஏற்படும். தொழில் துறையினர், வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக்க முயற்சியில் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் மூலம் கல்வி சார்ந்த விஷயங்களில் நன்மை ஏற்படும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருகுவது அவசியம். சகோதர சகோதரிகளுக்கு பல்வேறு பரிசு பொருட்களை அளித்து அவர்கள் மனம் மகிழ செய்தால் நன்மைகள் உண்டு.

மகரம்

பேச்சில் வேடிக்கையோடு, காரியங்களில் கவனமும், நேர்மறை எண்ணங்களும் கொண்ட மகரம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத மகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் நடந்தேறும். குடும்ப நிலையில் செலவுகள் கையை கடித்தாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எண்ணெய், பெட்ரோல் நிறுவன பங்குகளில் லாபம் பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்ளும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். அலைச்சல் காரணமாக அசதி, தலை சுற்றல் ஏற்பட்டால் தக்க ஓய்வு, மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தந்தை வழி உறவினர்களுக்கு உதவிகள் செய்வதுடன் அவர்களுடைய ஆசைகளை பெறுவதும் பல நன்மைகளை தரும்.

கும்பம்

தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனும், ரகசியங்களை பாதுகாக்க கூடிய தன்மையுள்ள கும்பம் ராசியினருக்கு, சிக்கல்கள் அகன்று எதிர்காலம் குறித்த நம்பிக்கை மனதில் உருவாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் சில சிக்கல்களை சந்தித்து அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் புது தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஜலதோஷம், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். புற்று உள்ள அம்மன் கோவில் அல்லது ஆலமரத்து அடியில் உள்ள நாகர் சிலைக்குமஞ்சள் தடவி தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

மீனம்

வெளிப்படையான உள்ளமும், மற்றவர்கள் மீது அக்கறை கொண்ட இதயமும் படைத்த மீனம் ராசியினர் இந்த வாரம் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி, உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் கடந்த கால சிக்கல்கள் படிப்படியாக விலகி, எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில்துறையினர், வியாபாரிகள் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். நேரம் கெட்ட நேரத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று கோளாறு, அஜீரணம் ஏற்படும். உடல் ஊனமுற்றோருக்கு இயன்றவரை அன்னதானம் செய்தால் பல நன்மைகள் வந்து சேரும்.

Read Entire Article