இந்த வார ராசிபலன்
2024 அக்டோபர் 13 தேதி முதல் 19 தேதி வரை (புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 தேதி வரை) வார ராசி பலன்
மேஷம்:-
தடை தாமதங்களை சந்தித்து வெற்றி பெறும் வாரம் இது. இல்லத்தரசிகளுக்கு குடும்ப ரீதியான மன அழுத்தங்கள் இருந்தாலும் நிம்மதி பாதிக்கப்படாது.
தொழில்துறையினர் தொழிலை விரிவாக்கம் செய்ய புதிய எந்திரங்களை அமைப்பர். வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் கூடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் தடைகளை கடந்து புதிய ப்ராஜெக்ட்களை செயல்படுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
கலைத்துறை மற்றும் மீடியாவில் பணியாற்றுபவர்கள் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் மறைமுக லாபம் கிடைக்கும் காலகட்டம் இது.
ரிஷபம்:-
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இல்லத்தரசிகளை பொறுத்தவரை யாருடனும் வாக்குவாதம் கூடாது. தொழில் துறையினர் சந்தித்து வந்த தடை தாமதங்கள் படிப்படியாக விலகும்.
வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்க சந்தர்ப்பம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை தவிர்க்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட் துறையினர் ரசாயன தயாரிப்பு நிறுவன பங்குகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீடியா மற்றும் கலைத்துறையில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி முக்கியமான காரியங்களை ஒப்படைக்க வேண்டாம்.
காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய சூழல் ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்தவித புது முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம்.
மிதுனம்:-
தடை தாமதங்களுக்கு பிறகு வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்கள் சென்று திரும்பும் சூழல் அமையும்.
தொழில் துறையினர் இந்த வாரம் கூடுதலாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் வர்த்தக ரீதியாக வெளியூர் செல்லும் சந்தர்ப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மகிழ்ச்சியான சூழலில் பணியாற்றுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் அரசு தரப்பு ஒப்புதல்களை பெற அலைய வேண்டியிருக்கும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளில் ஆதாயம் அடைவார்கள்.
கலை மற்றும் மீடியா துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக உழைத்து தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும். குடிநீர் மற்றும் குளிர் பானங்களை சுகாதாரமற்ற இடங்களில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
கடகம்:-
தடைகள் பல கடந்து காரிய வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. சுமுகமாக இருந்தாலும் குடும்பத்தில் அவ்வப்போது சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு விலகும்.
தொழில் துறையினர் திடீர் தடைகளை சந்தித்து அவற்றை சீர்படுத்த வேண்டும். வியாபாரிகள் வர்த்தக தகவல் தொடர்புகளில் கவனம் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் எவ்வித கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் நீர்நிலைகளுக்கு அருகில் தங்களுடைய புதிய திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட் துறையினர் உணவுப்பொருள் மற்றும் எந்திர தளவாடங்கள் பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர்.
மீடியா மற்றும் கலைத்துறையில் பணியாற்றுபவர்கள் வெளியூர் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பார்கள். வெள்ளை மற்றும் சனி ஆகிய நாட்களில் இரவு நேர பிரயாணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
சிம்மம்:-
புதிய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம் இது. குடும்ப சூழலில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அகன்று நிம்மதி ஏற்படும். தொழில்துறையினருக்கு நல்ல புதிய தொடர்புகள் கிடைத்து தொழில் விருத்தி ஏற்படும்.
வியாபாரிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த ஆதாயம் தடைபடாது. உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் சந்தித்து வந்த சிக்கல்கள் படிப்படியாக விலகும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் திட்டங்களை செயல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட் துறையினர் எந்திர தளவாடம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளில் ஆதாயம் பெறுவர். கலைத்துறை மற்றும் மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய ப்ராஜெக்ட்களை மேற்கொண்டு நல்ல பெயர் வாங்குவார்கள். வழக்கமான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி:-
சமூக அளவில் செல்வாக்கு கூடும் காலகட்டம் இது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் துறையினர் காலத்திற்கேற்ப சிந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பர்.
அரசாங்க ஒத்துழைப்பை எதிர்பார்த்த வியாபாரிகள் அதில் தடை தாமதங்களை சந்திப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்று பணியாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கி செயல்படுத்தலாம்.
ஷேர் மார்க்கெட் துறையினர் சர்வதேச பங்குகளை கூர்ந்து கவனித்து முதலீடு செய்து ஆதாயம் பெறலாம். மீடியா துறையினர் மனதிற்கு பிடிக்காவிட்டாலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யும் சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற ஆதாயம் பெறுவார்கள். உடல் அசதி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் நலமாகும்
துலாம்:-
எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளால் குடும்பத்தினர் குதூகலமாக இருப்பார்கள். தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து சமூகமாக தீர்ப்பார்கள்.
வியாபாரிகள் எச்சரிக்கையாக இந்த வாரம் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடங்களில் தங்கள் வேலைகளை மட்டும் செய்து வருவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையினர் இதுவரை சந்தித்து வந்த தடை தாமதங்கள் விலகப் பெறுவார்கள்.
ஷேர் மார்க்கெட் துறையினர் என்ஜினியரிங் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். மீடியாவில் இருப்பவர்கள் எதிர்பாராத தடை தாமதங்களை எதிர்கொண்டு பணியாற்ற வேண்டும்.
கலைத்துறையினர் திடீர் பயணங்களை மேற்கொள்வர். நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம்:-
நல்ல புதிய திருப்பங்கள் கொண்ட காலகட்டம் இது. குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை நிலவும். தொழில் துறையினர் உழைப்புக்கேற்ற ஆதாயத்தை பெறுவார்கள்.
வியாபாரிகள் தொழில்முறை பயணமாக பல இடங்களுக்கும் சென்று வருவர். உத்தியோகஸ்தர்கள் தடை தாமதங்களை சந்தித்து கடந்து செல்வார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் படிப்படியாக மந்த நிலை அகன்று நல்ல நிலை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் வழக்கத்தை விட கவனமாக செயல்பட வேண்டும். மீடியா துறையில் பணியாற்றுபவர்கள் நிர்வாகத்தின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவார்கள்.
கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.
தனுசு:-
புதிய எண்ணங்களும் மனத்தெளிவும் ஏற்படும் காலகட்டம் இது. குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் மெல்ல விலகும். தொழில்துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம்.
வியாபாரிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வர்த்தக தொடர்புகளை பெற்று மனம் மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவர். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட் துறையினர் நிலக்கரி மற்றும் ரசாயனம் ஆகிய பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் தடைகளை கடந்து பணிகளை நிறைவேற்றுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவார்கள்.
புதன், வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் இரவு பிரயாணங்களையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்:-
செலவினங்கள் படிப்படியாக கட்டுக்குள் வரும் காலகட்டம் இது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் எவ்விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
தொழில்துறையில் இருப்பவர்கள் புதிய மாற்றங்களை செய்து லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் சொந்த கட்டிடங்களில் வியாபாரங்களை தொடங்கி நடத்துவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உற்சாகமாக பணியாற்றுவர். ரியல் எஸ்டேட் துறையினர் நிதானமான போக்கை கடைபிடிக்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய விளைபொருட்கள் சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை பெறுவர்.
மீடியாவில் பணியாற்றுபவர்கள் பணிச்சுமைகளை உற்சாகமாக ஏற்று செயல்படுவார்கள். பிறரிடமிருந்து நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கும்பம்:-
மனதில் ஒருவித கவலை ஏற்பட்டு ஓரிரு நாட்களில் விலகும். குடும்ப நிலையை பொறுத்தவரை அவரவர் அமைதியாக தமது வேலைகளை பார்ப்பதே நல்லது.
தொழில்துறையினருக்கு இது லாபகரமான வாரம். வியாபாரிகளை பொறுத்த வரை விவசாய விளைபொருள்களால் நல்ல ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய உழைப்புக்கேற்ற மரியாதையை நிர்வாகத்திடம் இருந்து பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை உற்சாகமாக தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் அகல தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீடியாவில் இருப்பவர்களுக்கு உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்று ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்:-
மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.
வியாபாரிகள் வர்த்தக ரீதியான கூட்டாளிகளை சந்தித்து வியாபாரத்தை அதிகரிக்கும் திட்டங்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் விளம்பரங்களுக்கு ஏற்ற ஆதாயம் அடைவர்.
ஷேர் மார்க்கெட் துறையினர் வெளிநாட்டு பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு தடைபட்ட வாய்ப்புகள் அவர்களை தேடி வரும்.
மீடியாவில் இருப்பவர்கள் புதிய அவதாரங்களில் தங்களை வெளிப்படுத்தும் சூழல் உருவாகும். மின்சாரம் மற்றும் இயந்திரங்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.