வார ராசிபலன் 04.05.2025 முதல் 10.05.2025 வரை

3 days ago 5

இந்த வார ராசிபலன்:-

மேஷம்

இன்றைய நாளை சிறப்பாக நடத்தினால் நாளைய நாள் நன்றாக அமையும் என்ற கொள்கை கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். பண வரவு நிம்மதி தரும். இல்லத்துணையை அனுசரித்து செல்லவும்.

சிறு தொழில் துறையினர், மருத்துவர்கள், பொறியாளர்கள் நல்ல செய்திகள் கிடைக்கப்பெறுவார்கள். தொழில்நுட்ப கருவிகள், மருத்துவ உபகரண வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். தனியார் துறை மேலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் தடை தாமதங்களை கடந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு நிறுவன மற்றும் எரிவாயு பங்குகள் மூலம் லாபம் அடைவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள்.

தோலில் பாதிப்பு, மன உளைச்சல் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். இரவு நேரங்களில் தெரு நாய்களுக்கு உணவு இடுவதும், அருகில் உள்ள கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் அளிப்பதும் நன்மைகளை வழங்கும்.

ரிஷபம்

மற்றவர்களுக்கு நாம் உதவி செய்தால் நமக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்ற நல்ல நம்பிக்கை கொண்ட ரிஷபம் ராசியினருக்கு, மனதில் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். குடும்ப பொருளாதாரம், சமூக மதிப்பு ஆகியவை மேம்படும்.

கட்டிட கலைத்துறை, சினிமா, மீடியா தொழில் துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். போட்டோகிராபி, நிதி ஆலோசனை, கட்டுமான பொருள்கள் வியாபாரிகள் சிக்கல்களை வெற்றிகரமாக கடந்து செல்வர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான சூழல் ஏற்படும்.

ரியல் எஸ்டேட் துறையினர் நடந்து வரும் கட்டுமான பணித்திட்டங்களை கவனமாக பார்வையிட வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டுமான நிறுவனம், விமான நிறுவனம், எரிவாயு நிறுவன பங்குகளில் எதிர்பார்த்த லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வர்.

காய்ச்சல், கை-கால் அசதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள திருக்கோவில்களுக்கு சிவப்பு நிற மாலைகளை வழங்குவதும், மஞ்சள் நிற வஸ்திரங்கள் வழங்குவதன் மூலமும் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

எண்ணம், சொல், சிந்தனை ஆகியவற்றில் முற்றிலும் சுதந்திர மனோபாவத்தை விரும்பும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவர். மாமா வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பண வரவால் மனதிடம் ஏற்படும்.

சுற்றுலா, ஓட்டல், ஆடை, ஆபரண தயாரிப்பு தொழில் துறையினர் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். பத்திரிக்கை துறை, இவன்ட் மேனேஜ்மென்ட், ஏற்றுமதி-இறக்குமதி பொருள் வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். கம்ப்யூட்டர் மற்றும் பத்திரிக்கை துறை தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு எரிவாயு, விமான, கப்பல் நிறுவன பங்குகளால் ஆதாயம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி குறித்து முக்கியமான தகவல்கள் கிடைக்க பெறுவார்கள்.

ஜீரணக்கோளாறு, அடிவயிறு, கால்கள் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். முடிந்தவரை ஒவ்வொரு நாளும் மௌன விரதம் இருப்பதும், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமும் பல சிக்கல்கள் விலகும்.

கடகம்

மற்றவர்களுடைய மகிழ்ச்சியில் பங்கேற்பதை விட துன்பத்தில் பங்கேற்பதில் முன்னிற்கும் கடகம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் கைகளில் வந்து சேரும்.

மனித வளம், மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் துறையினர் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். உணவகம், வாகனம், கட்டுமான பொருள் வியாபாரிகள் நீண்ட நாட்களாக மனதில் நினைத்து வந்த விஷயங்களை செய்யலாம். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள்.

ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், இன்ஜினியரிங் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்விக்கான ஆலோசனை கிடைக்க பெறுவார்கள்.

கணுக்கால், முட்டி, வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு தக்க சிகிச்சையால் அகலும். முதியோர்களுக்கு தண்ணீர் பாட்டில் தானமாக வழங்குவதும், கோவில்களில் குளிர்ச்சியான பானகம் நிவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்குவது பல நன்மைகளைத் தரும்.

சிம்மம்

எது நடந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என்ற தன்னம்பிக்கை கொண்ட சிம்மம் ராசியினர் இந்த வாரம் மனதில் உறுதி கொண்ட மனிதர்களாக உலா வருவார்கள். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டு. உறவுகளிடையே மதிப்பு உயரும்.

கலைத்துறை, பெட்ரோல் பங்க் தொழில், வேளாண் விளைபொருள் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க பெறுவார்கள். அரசியல்வாதிகள், சிறு தொழில் முனைவோர், ஆடை-ஆபரண வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளிலும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கி செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து உற்பத்தி நிறுவன, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கான தகவல்களை அறிந்து கொள்ள வெளியூர் செல்வார்கள்.

வாய்ப்புண், தொண்டை வலி, உடல் அசதி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு தகுந்த மருத்துவம் மூலம் குணமடையும். தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை பெறுவதும், காலை மாடுகளுக்கு பழங்கள் மற்றும் புல்லை உணவாக வழங்குவதும் நன்மைகளை தரும்.

கன்னி

குழப்பமான சூழ்நிலைகளிலும் நுட்பமாக சிந்தித்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் கன்னி ராசியினர் இந்த வாரம் மகிழ்வுடன் இருப்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

மின் சாதன தயாரிப்பு தொழில்துறை, எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் புதிய வாய்ப்புகள் பெற்று முன்னேறுவார்கள். பத்திரிக்கை துறை, மருத்துவம், சந்தை வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் குழப்பங்கள் அகன்று தெளிவாக புதிய திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவனம், சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர்.

கால்களில் வலி, வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் நீங்கும். முடிந்தவரை வயதானவர்களுக்கு மதிய உணவு தானமாக வழங்குவதும், இரவில் நாய்களுக்கு உணவு அல்லது பிஸ்கட் வழங்குவதும் நன்மைகளை தரும்.

துலாம்

துலாக்கோல் போன்று மனதில் சமநிலையோடு அனைத்து விஷயங்களையும் செய்ய முயற்சிக்கும் துலாம் ராசியினரை இந்த வாரம் உறவுகள் நாடித்தேடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வழக்கறிஞர், பால்பொருள் உற்பத்தி, ஓட்டல் தொழில் துறையினர், ரசாயன பொருள் உற்பத்தி ஆகிய தொழில் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். கலைத்துறை, பேஷன் டிசைன், சொகுசு வாகன வியாபாரிகள் முன்னேற்றம் அடைவதற்குரிய விஷயங்களை செயல்படுத்துவார்கள். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களால் ஆதாயம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, நிதி நிறுவன, உள் அலங்கார நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்றாலும் கூட கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று தெரிந்து கொள்வார்கள்.

மன உளைச்சல், தலைசுற்றல், தோல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முடிந்தவரை அதிகம் பேசாமல் இருப்பதும், உண்ணா நோன்பு இருப்பதும் பல சிக்கல்களை தவிர்க்க உதவும்.

விருச்சிகம்

காரிய வெற்றி என்ற ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.

பொறியியல், ரசாயன தொழில் துறையினர், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு இது சாதகமான காலம். ஆராய்ச்சியாளர்கள், எண்ணெய், நகை-ஜவுளி வியாபாரிகள் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்ற சந்தர்ப்பம் அமையும். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள்.

ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறைகள், ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பல அடுக்குமாடி கட்டுமான பணிகளை தொடங்குவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர்.

உடலில் அசதி, காது, கை-கால்களில் வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். வீட்டிற்கு அருகில் உள்ள பெண் தெய்வ கோவில்களில் வாசனை மிகுந்த மலர் மாலைகளை சமர்ப்பணம் செய்வதும், அங்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்குவதும் பல நன்மைகளை தரும்.

தனுசு

எந்த ஒரு விஷயத்திலும் உள்ள மாற்றுக் கருத்துகளை கவனமாக கேட்டு அதன்படி நடந்து கொள்ளும் தனுசு ராசியினர் இந்த வாரம் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த பணவரவு கையில் வந்து சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

சிறுதொழில் துறையினர், கட்டுமான பொருள், வேளாண் விளைபொருள் வியாபாரிகள் திட்டமிட்ட வளர்ச்சி கிடைத்து மகிழ்வர். சுற்றுலா, பத்திரிக்கை, ஆசிரியர், மின்னணு தொழில்களில் உள்ளோர் பிஸியாக இருப்பார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றங்களை சந்திப்பார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமானத் திட்டங்களை பிரமாண்டமாக தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஓட்டல், மருத்துவமனை, கட்டிட பொருள் நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். கல்லூரி மாணவர்கள் அரசாங்க போட்டித்தேர்வுகளில் பங்கு பெறுவார்கள்.

வயிற்று வலி, பசியின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு தகுந்த சிகிச்சை மூலம் விலகும். இந்த வாரம் ஓரிரு முறை சிவபெருமான் மற்றும் நந்தி ஆகிய தெய்வங்களுக்கு வஸ்திரம் மற்றும் மலர் மாலை சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால் பல நன்மைகள் வந்து சேரும்.

மகரம்

யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடாமல் அதற்குள் என்ன உள் அர்த்தம் இருக்கிறது என்பதை ஆராயும் மகரம் ராசியினர் இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவு உண்டு. பொது விஷயங்களில் ஈடுபடும் பொழுது நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இரும்பு, எந்திரம், ஜவுளித்துறை, ஏஜென்சி ஆகிய தொழில் துறையினர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும். அரசியல்வாதிகள், சரக்கு போக்குவரத்து, சாலையோர கடை வியாபாரிகள் காரிய வெற்றி பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் மனதில் நினைத்த ஆதாயங்களை பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை உடனடியாக தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண்மை, அரசு கட்டுமான நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசனை செய்து எதிர்காலம் குறித்து தீர்மானிப்பது நல்லது.

மனக்குழப்பம், ஜீரண கோளாறு, உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு தகுந்த ஓய்வு எடுப்பதன் மூலம் விலகும். புதியதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு பரிசு பொருள்களை வழங்குவதும், பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதும் நன்மைகளை வழங்கும்.

கும்பம்

அனைவரையும் அரவணைத்து ஒன்றாக சேர்ந்து செயல்பட்டு வெற்றியில் மற்றவர்களுக்கும் பங்களிக்கும் இயல்பு கொண்ட கும்பம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவர்.

கணினி, மருந்து, இரும்பு, ஆராய்ச்சி தொழில் துறையினர் புதிய வாய்ப்புகளை பெற்று வெற்றி நடை போடுவார்கள். சமூக சேவை, உணவகம், மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெறுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி நன்மை பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலில் புதிய மாற்றங்களை செய்வர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருத்துவமனை, மசாலா பொருள் தயாரிப்பு, ஓட்டல் நிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை கற்பதில் ஆலோசனை பெற்று நடப்பார்கள்.

இடுப்பில் வலி, உடல் அசதி, மனக்குழப்பம், சளித்தொல்லை ஆகியவை ஏற்பட்டு தக்க சிகிச்சையால் விலகும். அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை சமர்ப்பணம் செய்வதும், அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதும் பல நன்மைகளைத் தரும்.

மீனம்

சிந்தனையில் குழப்பம் இருந்தாலும் ஒரு விஷயத்தை செய்யும் பொழுது தீர்மானமாக அதை நடத்தி முடிக்கும் மீனம் ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

ஆலோசகர்கள், அச்சகம், ஹெர்பல் பொருள் தயாரிப்பு தொழில் துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவர். கலைத்துறை, பத்திரிக்கை, மளிகை, காய்கறி வியாபாரிகள்

திட்டமிட்ட நன்மைகள் கிடைக்கப் பெறுவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் பல நன்மைகள் கிடைக்கப் பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை தொடங்கி முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் உற்பத்தி, இயற்கை எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர்.

காய்ச்சல், சளி, மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு விலகும். உறவினர் வீட்டு குழந்தைகளுக்கு பரிசு பொருள்களை வழங்குவதும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக அளிப்பதும் பல நன்மைகளை தரும்.

 

Read Entire Article