வார ராசிபலன் 03.11.2024 முதல் 09.11.2024 வரை

2 months ago 12

இந்த வார ராசிபலன்

மேஷம்

வீடு மனை வண்டி வாகன யோகம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம் இது. குடும்பத்தில் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. மகிழ்ச்சி நிலவும். தொழில்துறையினர் புதிய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகள் விவசாய விளைபொருட்கள் மூலம் ஆதாயம் அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றமும், கூடுதல் பொறுப்புகளும் அளிக்கப்படும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கி அனுகூலம் பெறலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து நிறுவனங்களின் பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய தொடர்புகள் மூலம் நன்மை அடைவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் இரவு-பகல் பாராமல் கடமையாற்ற வேண்டும். மனதில் எதிர்பாராத குழப்பங்கள் ஏற்பட்டு அகலும்.

ரிஷபம்

சமூக அளவில் மதிப்பு மரியாதை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். எதிர்பார்த்த தன வரவு ஏற்படும். குடும்ப நிலையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். தொழில் துறையினர் கடந்த கால சிக்கல்களில் இருந்து விடுபட்டு புதிய பாதையில் பயணம் செய்வார்கள். வியாபாரிகள் கடன் தருவது மற்றும் வாங்குவது ஆகிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பொறுப்புகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணியிடங்களில் சிக்கல்களை சந்தித்து சரி செய்வர். ஷேர் மார்க்கெட் துறையினர் எண்ணெய் வித்துக்கள், விவசாய விளைபொருள் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சி அடைவர். மீடியாவில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். காய்ச்சல், தலை சுற்றல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் சரியாகும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

வீடு மாற்றம், வாகன மாற்றம் ஆகிய நல்ல மாற்றங்கள் உண்டு. குடும்ப நிலையில் சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழில் துறையினருக்கு திடீரென நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் புதிய இடங்களில் தொழில் கிளைகளை அமைக்கும் சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக தங்களுடைய பணிகளை மேற்கொள்வார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. ஷேர் மார்க்கெட் பிரிவினர் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு பணிகளை கச்சிதமாக முடிக்க வேண்டும். மன அழுத்தம் காரணமாக தூக்கம் வருவதில் சிரமங்கள் ஏற்பட்டு விலகும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

கடகம்

உற்சாகமான காலகட்டம் இது. குடும்ப நிலையை பொறுத்தவரை தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். தொழில்துறையினர் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரிகள் நேரடி போட்டியாளர்களை சந்திப்பதால் வர்த்தகம் பெருக புதிய யுக்திகளை கையாள வேண்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நடவடிக்கையால் மன உளைச்சல் அடைவர். ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது நல்ல காலகட்டம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு பணிகளை முடிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் தங்களுடைய கோபதாபங்களை வெளிக்காட்டாமல் பணியாற்ற வேண்டும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

மனதில் தெளிவு ஏற்பட்டு சுறுசுறுப்பாக செயல்படும் காலகட்டம் இது. குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் இனிமையாக நடக்கும். தொழில் துறையினருக்கு நல்ல ஆதாயம் தரும் காலகட்டம். வியாபாரிகள் புதிய தொடர்புகள் மூலம் லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் புதிய நபர்களை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடக்கூடாது. ரியல் எஸ்டேட் துறையினர் மழை காரணமாக திட்டப் பணிகள் பாதிக்கப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் மின்சார நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். கலைத்துறையினர் எதிர்பாராத தடைகளை சந்தித்து அதிலிருந்து விடுபடுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜலதோஷம், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும்.

கன்னி

பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடிய காலகட்டம் இது. வியாபாரிகள் பல தடைகளை சந்தித்து பின் ஆதாயம் பெறுவார்கள். வியாபாரிகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட குறைகளை பரிசீலனை செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்பும், வேலை சுமையும் கூடும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டுமான பொருள்கள் நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். கலைத்துறையினருக்கு புதிய நபர்கள் மூலம் தொடர்புகள் ஏற்பட்டு நன்மை பெறுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் மாற்று சிந்தனையை செயல்படுத்தி வெற்றி காண வேண்டும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு பிரயாணங்களை தவிர்க்க வேண்டும்.

துலாம்

குடும்பத்தில் நிம்மதியும், பண வரவும் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெற்று தொழில் விருத்தி கிடைக்க பெறுவார்கள். வியாபாரிகள் நீண்ட நாட்களாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை பார்க்காமல் பணியாற்றி நிர்வாகத்தின் நன்மதிப்பு பெற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் விளம்பரங்களை புதுமையாக செய்தால் தொழில் விருத்தி உண்டாகும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறுவர். கலைத்துறையினர் தடை தாமதங்களை கடந்து வெற்றி பெற வேண்டும். மீடியாவில் பணியாற்றுபவர்கள் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். உடல் நல சிகிச்சை பெறுபவர்கள் நல்ல குணம் அடைவர்.

விருச்சிகம்

குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு சந்தர்ப்பம் உருவாகும். செலவினங்கள் அதிகமாகும் காலகட்டம் இது. தொழில் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் கஷ்ட நஷ்டம் பார்க்காமல் பணியாற்றி நிர்வாகத்தின் மதிப்பை பெற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் சிக்கல்களை சந்தித்தாலும் லாபம் அடைவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஆடை ஆபரண தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறை அன்பர்கள் உடல் நலம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு சரியாக செய்ய வேண்டும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

தனுசு

பல தடை தாமதங்களுக்கு பிறகு முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உற்சாகம் இருந்தாலும் சில வாக்குவாதங்கள் உருவாகி அகலும். தொழில் துறையினருக்கு சரளமான பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் வங்கி கடன் மூலம் வீடு வாகன வசதி பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் நடந்து வரும் திட்டங்களின் மீது கவனம் கொள்ள வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் மின்சார நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். கலைத்துறையினர் சிரமங்களுக்கு ஏற்ற ஆதாயத்தை அடைவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய நபர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மகரம்

பயணங்கள் மூலம் காரிய வெற்றி அடையும் காலகட்டம் இது. குடும்பத்தில் பொருளாதார வரவு தடை தாமதங்களுக்கு பிறகு ஏற்படும். தொழில்துறையினருக்கு செலவினங்கள் அதிகரிக்கும் வாரம் இது. வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில் பொருட்கள் வந்து சேர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மன உளைச்சல் அடைவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். கலைத்துறையினருக்கு இது வசந்த காலம். மீடியாவில் பணிபுரிபவர்கள் பிரபலமடையும் காலகட்டம் இது. உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.

கும்பம்

நிதானமாக செயல்பட்டு சிக்கல்களை தீர்க்க வேண்டிய காலகட்டம் இது. செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி இருக்கும். தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயங்களை அடைவதில் தடை தாமதம் உண்டு. வியாபாரிகள் பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம் இது. ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பாராத ஆதாயம் அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மின் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். கலைத்துறையினர் எதிர்ப்புகளை நேரடியாக சந்திக்க வேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து கடமையை செய்ய வேண்டும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.

மீனம்

பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து நன்மைகளை பெற வேண்டும். குடும்பத்தில் வரவும், செலவும் சரியாக இருக்கும். தொழில்துறையினர் புதிய கடன்களை வாங்குவதை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிர்பார்த்த நன்மதிப்பை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். கலைத்துறையினர் புதிய நண்பர்களுடைய தொடர்பு மூலம் நன்மை அடைவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் கூடுதல் பிஸியாக இருப்பார்கள். அலைச்சல் காரணமாக உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

 

Read Entire Article