
மும்பை.
இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் வார இறுதி நாளான இன்று (23.5.2025 - வெள்ளிக்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தது.
அதன்படி, 243 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 853 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 456 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 398 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
259 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின்நிப்டி 26 ஆயிரத்து 485 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 769 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 721 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
118 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 592 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 614 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 962 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.