வாடிப்பட்டி அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

2 months ago 7

வாடிப்பட்டி, பிப். 18: சமயநல்லூர் புதுதெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சந்தோஷ்(22). இவர் தனது நண்பரான சமயநல்லூர் டபேதார் சந்தையை சேர்ந்த ஐயப்பன் மகன் லாலு பிரசாத் 21) என்பவருடன், டூவீலரில் நேற்று வாடிப்பட்டி வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் சமயநல்லூருக்கு திரும்பி சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டக்குளம் பிரிவு பகுதியில் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனம் சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த லாலு பிரசாத்தை அப்பகுதியில் இருந்துவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post வாடிப்பட்டி அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article