வாடகை அனுமதி பெறாமல் இயக்கிய வாகனம் பறிமுதல்

2 months ago 10

 

பள்ளிபாளையம், நவ.8: குமாரபாளையத்தில் வாடகைக்கான அனுமதி பெறாமல், வாடகைக்கு ஓட்டிய வாகனத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர், நேற்று மாலை பள்ளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவேரி ரயில் நிலையம் பகுதியில் வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த ஆம்னி வேனை, அதன் உரிமையாளர் வாடகை அனுமதி பெறாமல் வாடகைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாடகை அனுமதி இல்லாமல் வாகனத்தை வாடகைக்கு இயக்கியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post வாடகை அனுமதி பெறாமல் இயக்கிய வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article