புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், பெயருக்குத்தான் கூட்டணி ஆட்சியே தவிர, இரண்டு கட்சிகளும் ஒட்டாமல் தான் உறவாடி வருகின்றன. இதைவிட விநோதம் என்னவென்றால், பாஜக-வுக்குள்ளேயே இங்கே பல கோஷ்டிகளாக இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் பாஜக அமைச்சர்கள், பாஜக நியமன எம்எல்ஏ-க்கள் ஓர் அணியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஓர் அணியாக நிற்கிறார்கள். பாஜக எம்எல்ஏ-க்களான ஜான்குமாரும் கல்யாணசுந்தரமும் சுழற்சி முறையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரினர்.