சென்னை: வரும் நவ.16, 17 மற்றும் நவ.23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்த முகாம் குறித்து மக்களுக்கு ஆட்டோ பிரச்சாரம், நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தவெக தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையம், 2025 ஜன.1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.