திருவாடானை, டிச.25: திருவாடானை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழையின் காரணமாக இப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் இங்குள்ள கண்மாய்கள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. இதனால் இப்பகுதி கண்மாய்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள் வெவ்வேறு காட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலக்குடி விலக்கு ரோடு பகுதியில் ஆண் மான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த அடிபட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மான் இறந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவக் குழுவினரும் மானின் உடலை மீட்டு பரிசோதனை செய்து காட்டு பகுதியில் புதைத்தனர்.
The post வாகனம் மோதி மான் சாவு appeared first on Dinakaran.