வாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

3 hours ago 3

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எந்த பகுதிகளிலும் யாரும் வாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது என்று மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை ஒட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலை, எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை, அண்ணாமலை ஓட்டல் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எப்பகுதிகளிலும் யாரும் வாகன ரேசில் ஈடுபடுவதோ நடத்துவதோ கூடாது. மீறுபவர்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article