வா.ராமலிங்கபுரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்

1 month ago 7

கழுகுமலை, மார்ச் 25: முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரசார கூட்டம், வானரமுட்டி அருகே வா.ராமலிங்கபுரம் கிராமத்தில் நடந்தது. கயத்தாறு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், வானரமுட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இசக்கியம்மாள், பேரூர் மாவட்ட பிரதிநிதி முப்பிடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர்கள் முரளி, சரத்பாலா, இளையகோபால், தமிழ்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் சண்முகசுந்தரம், வா.ராமலிங்கபுரம் கிளை செயலாளர் மகேந்திரகுமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திர பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வா.ராமலிங்கபுரத்தில் திமுக தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article