வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீசார் கைது

2 days ago 3

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி காவல்நிலையம் புதுரோடு பகுதியை சேர்ந்த நபர் இரண்டு மது பாட்டில் வைத்திருந்தார். அப்போது ரோந்து வந்த தனுஷ்கோடி போலீசார் அந்த நபரை பிடித்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதையெடுத்து அந்த நபர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று அந்த நபரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பினர்.

காவல் நிலையத்தில் வைத்து ரூ.2,500 லஞ்சம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சிறப்பு எஸ்ஐ கனகசபாபதி (55), காவலர்கள் முத்து கருப்பையா (33), காவல் நிலைய எழுத்தர் மாரிச்செல்வன் (32) ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். சிக்கிய போலீசாரை மேல் நடவடிக்கைக்காக சுமார் ஆறு மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.

The post வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீசார் கைது appeared first on Dinakaran.

Read Entire Article