மதுரை : நெல்லை நீதிமன்றத்தில் அடிக்கடி பணி புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் நியாயமற்ற காரணங்களுக்காக பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள்தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள்; நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
The post வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது அல்ல : ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.