டெல்லி: வழக்கறிஞர்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்ப கால சட்டப்பணியில் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆல் இந்தியா ரேடியோவிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “எந்த ஒரு தொழிலிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அந்த வகையில், சட்டத் தொழிலில் முதல் மாதத்தில் கிடைக்கும் சம்பளம் என்பது மிக அதிகமாக இருக்காது.
இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்ப கால சட்டப்பணியில் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்காக வருகிறார்கள். அதே நேரம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது. எனவே இது இருதரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியது என்பது மூத்த வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்.
The post வழக்கறிஞர்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு appeared first on Dinakaran.